டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தால் இன்று (1) வழங்கிவைக்கப்பட்டன.
கனடா, பிரம்டன் தமிழ் ஒன்றியம் ( Brampton Tamil Association- Canada ), மற்றும் அவுஸ்திரேலியா, இந்திய வம்சவாளி இலங்கை தமிழர் அமைப்பு ( AIOTS- AUSTRALIA ) ஆகியவற்றின் பூரண நிதி அணுசரனையுடன் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேஸ்குக்கர், Electric kettle அடங்களாக சமையல் பாத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கம்பளை, கங்கவட்ட வீதி, மார பகுதி, கம்பளவெல, பொரளமங்கட, பேராதெனிய உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட – தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்கள் இதன்மூலம் பயன்பெற்றனர்.
இந்த நிகழ்வு கம்பளை சபாயர் ஹில்ஸ் மண்டபத்தில் நடைப்பெற்றது. இதன்போது இத்திட்டத்தை முன்னெடுக்க ஒத்துழைப்பு நல்கிய கம்பளை சபாயர் ஹில்ஸ் மண்டபத்தின் உரிமையாளர் டி.பிரகாஷ் மலையக கல்வி அபிவிருத்தி மன்ற உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டார்.
கம்பளை பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி, கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் சர்வமத தலைவர்கள் அதிதிகளாக கலந்துகொண்டு, பொருட்களை வழங்கி வைத்தனர்.மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உதவி டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தால் இன்று (1) வழங்கிவைக்கப்பட்டன. கனடா, பிரம்டன் தமிழ் ஒன்றியம் ( Brampton Tamil Association- Canada ), மற்றும் அவுஸ்திரேலியா, இந்திய வம்சவாளி இலங்கை தமிழர் அமைப்பு ( AIOTS- AUSTRALIA ) ஆகியவற்றின் பூரண நிதி அணுசரனையுடன் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேஸ்குக்கர், Electric kettle அடங்களாக சமையல் பாத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன. கம்பளை, கங்கவட்ட வீதி, மார பகுதி, கம்பளவெல, பொரளமங்கட, பேராதெனிய உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட – தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்கள் இதன்மூலம் பயன்பெற்றனர். இந்த நிகழ்வு கம்பளை சபாயர் ஹில்ஸ் மண்டபத்தில் நடைப்பெற்றது. இதன்போது இத்திட்டத்தை முன்னெடுக்க ஒத்துழைப்பு நல்கிய கம்பளை சபாயர் ஹில்ஸ் மண்டபத்தின் உரிமையாளர் டி.பிரகாஷ் மலையக கல்வி அபிவிருத்தி மன்ற உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டார்.கம்பளை பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி, கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் சர்வமத தலைவர்கள் அதிதிகளாக கலந்துகொண்டு, பொருட்களை வழங்கி வைத்தனர்.மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.