• Nov 22 2024

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 94 பேர் சம்பவ இடத்திலேயே சாவு

Chithra / Oct 16th 2024, 4:13 pm
image

  

நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் சுமார் 94 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளான போது அதிலிருந்து பெட்றோலை எடுக்க சென்ற மக்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.


சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது.


எரிபொருள் தாங்கி வெடித்ததில் 94 பேர் சம்பவ இடத்திலேயே சாவு   நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் சுமார் 94 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளான போது அதிலிருந்து பெட்றோலை எடுக்க சென்ற மக்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement