சுவிட்ஸர்லாந்தில் இருந்து கடந்த மாதம் இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மீது சுவிஸ் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நாடுகடத்தலின் போது அதிகாரிகள் அடித்ததால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தின் புலம்பெயர்வுக்கான மாநில செயலகத்தின் நடவடிக்கைகள் "முற்றிலும் மனிதாபிமானமற்றது" என்று நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இதனை தன்னால் நம்ப முடியவில்லை எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் எங்கிஸ்டீனில் உள்ள புகலிட முகாமில் இருந்து எதுவும் அறிவிக்கப்படாமல் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சூரிச் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் இலங்கைக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, சுவிஸ் தடுப்புக்காவலில் பல தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது மூன்று இறப்புகள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் மீது தாக்குதல்.சுவிஸ் அதிகாரிகளின் செயலால் குழப்பம்.samugammedia சுவிட்ஸர்லாந்தில் இருந்து கடந்த மாதம் இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மீது சுவிஸ் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அதேவேளை நாடுகடத்தலின் போது அதிகாரிகள் அடித்ததால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.சுவிட்ஸர்லாந்தின் புலம்பெயர்வுக்கான மாநில செயலகத்தின் நடவடிக்கைகள் "முற்றிலும் மனிதாபிமானமற்றது" என்று நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.அத்துடன், இதனை தன்னால் நம்ப முடியவில்லை எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் எங்கிஸ்டீனில் உள்ள புகலிட முகாமில் இருந்து எதுவும் அறிவிக்கப்படாமல் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து சூரிச் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் இலங்கைக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இதேவேளை, சுவிஸ் தடுப்புக்காவலில் பல தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது மூன்று இறப்புகள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.