போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான இரகசிய தகவலைத் தொடர்ந்து, மாரபொலவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடச் சென்ற வெயாங்கொடை பொலிஸ் அதிகாரிகள் இருவரை வாளால் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், தம்பதியினர் வீட்டிற்குள் சிறிய பொதிகளில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
பொட்டலம் கட்டப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஒரு சிறிய மின்சார தராசையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்..
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் அலுவலர்கள் மீது வாள்வெட்டு: இருவர் கைது போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான இரகசிய தகவலைத் தொடர்ந்து, மாரபொலவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடச் சென்ற வெயாங்கொடை பொலிஸ் அதிகாரிகள் இருவரை வாளால் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டனர்.விசாரணையில், தம்பதியினர் வீட்டிற்குள் சிறிய பொதிகளில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.பொட்டலம் கட்டப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஒரு சிறிய மின்சார தராசையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.