• Jan 11 2025

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த முயற்சி; வலுக்கும் கண்டனங்கள்..!

Sharmi / Dec 28th 2024, 10:36 am
image

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை இனந்தெரியாத நபர்கள் கிளிநொச்சி நகரில் வைத்து வானில் கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீது கிளிநொச்சி நகரில் தாக்குதல் நடத்தி வானில் கடத்தும் முயற்சியொன்று 26.12.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவர் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வனைப் பின்தொடர்ந்து வந்திருந்த வான் யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் வழிமறித்து இவ்வாறு கடத்தலை முன்னெடுக்க முற்பட்டுள்ளது.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு மற்றும் பரவி வரும் போதைபொருள் கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியமை மற்றும் தகவல் அறியும் சட்டமூலத்தில் தகவல்களைப் பெற்று பல ஊழல்களை வெளிப்படுத்த முயன்றமையின் காரணமாக தாம் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளப்பட்டுள்ளார் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் முயற்சியை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வானைச் செலுத்தி வந்த சாரதியை அடையாளம் காட்ட முடியும் என்று தமிழ்ச்செல்வன் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் உரிய விசாரணையை மேற்கொண்டு அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணியை முன்னெடுக்கும் சூழ்நிலையை வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ஏற்படுத்தப் பாதுகாப்புத் தரப்பினர் பணியாற்ற வேண்டும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டமைக்கு  கிளிநொச்சி  மாவட்ட ஊடக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி ஊடக அமையம்  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

எமது ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன், நேற்று(26) மாலை தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் வாகனத்தில் வந்தோர் அவரை இடைமறித்து தமது வாகனத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்டுள்ளனர். இதை எதிர்த்துத் தமிழ்ச்செல்வன்  போராடியபோது, கடத்தற்காரர்கள் தமிழ்ச்செல்வனைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

 இதனையடுத்து தமிழ்ச்செல்வன்   கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 அரசியல் குறைபாடுகள், மக்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சினைகள், நிர்வாக முறைகேடுகள், ஊழல், சுற்றுச் சூழல் சிதைப்பு, சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள்பாவனை போன்றவற்றுக்கு எதிராக மிகவும் துணிச்சலான முறையில் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் அளித்து வரும் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது, அவருடைய பணிகளை முடக்குவதற்கான உள்நோக்கைக் கொண்டதாக சந்தேகம் கொள்ள வைக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன், யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பிந்திய காலத்திலும் துணிச்சலாவவும் நேர்மையாகவும் பணியாற்றியவர். இத்தகைய சிறப்பு மிக்க ஊடகவியலாளர் ஒருவரின் மீதான தாக்குதலானது,  மக்களுடைய நல் வாழ்வுக்கான எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகவே கொள்ளப்பட வேண்டும். 

ஊடகவிலாளர் மீதான இந்தக் கடத்தல் முயற்சியும் தாக்குதலும் ஊடகத்துறையின் சுயாதீனத்துக்கும் ஊடகவியலாளரின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். நாடு புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாக  அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே பதட்டத்தை உருவாக்குவதோடு ஊடகத்துறைக்கும் பாரிய சவாலை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 

இதேபோன்று அண்மையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்டமைக்கான சரியான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்  தொடர்வதால்தான் தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் உறுதிய முறையில் உரிய நடவடிக்கையை அரசும் காவல்துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடே என்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"போரின் போதும், போருக்குப் பின்னரான காலப் பகுதியிலும் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதற்கு ஊடகவியலாளர் கடத்தப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொல்லப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமையே காரணம்.

அதன் நீட்சியாக ஆயுத பலம், பண பலம், அரசியல் பலம் கொண்டவர்கள் மக்கள் நலன் சார்ந்து பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும், அவர்கள் மீதான அடக்குமுறைகளையும் தொடர்ந்தும் செய்த வண்ணமே உள்ளனர். அதனையே கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலும் எடுத்துக்காட்டுகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே பகல் பொழுதில் பொதுமக்கள் செறித்த பகுதியில் ஊடகவியலாளரைக் கடத்த முற்பட்டதுடன், தாக்குதல் நடத்தப்பட்டமை ஊடகவியலாளர்களது பாதுகாப்பையும் கேள்விக்கு உட்பத்தியுள்ளதுடன், நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கோருகின்றது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கிளிநொச்சியில் ஊடகவியலாளர் கடத்த முற்பட்டதுடன் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதுவரையில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்படாமையினையிட்டு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என மட்டு.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டு.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி அலுவலகம் ஒன்றில் கடமையும் பணிபுரியும் ஊடகவியலாளரும் கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளருமான முருகையா தமிழ்செல்வன் நேற்று மாலை (டிசம்பர் 26) தனது கடமையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிற வாகனத்தில் வந்த இருவர் அவரை கடத்திச் செல்ல முற்பட்டதுள்ளதுடன் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

புதிய ஆட்சியொன்று இந்த நாட்டினை பொறுப்பேற்றுள்ள நிலையில் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளமையானது இந்த நாட்டில்இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் என்பது தொடர்ச்சியாக இருந்துவருகின்றது.பல்வேறு வழிகளில் கடந்த காலங்கள் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.இது தொடர்பில் கடந்த காலத்தில் மட்டு.ஊடக அமையம் போராட்டங்களை முன்னெடுத்ததுடன் அது தொடர்பான அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போதும் அதேபோன்ற சூழ்நிலையே வடகிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது என்பதையே இந்த தாக்குதல் நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது.ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் மக்கள் பாதிப்புகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் மறுக்கப்படுமானால் அது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீதான கேள்வித்தன்மையினைவே வெளிப்படுத்தி நிற்கும்.

எனவே தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளருக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் அவரின் பாதுகாப்பு தொடர்பிலும் கரிசனை கொள்ளவேண்டும்.குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதுடன் கடந்த காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இந்த வேளையில் எங்களது நீதியை கோருகின்றோம்.

மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதுவரையில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்படாமையினையிட்டு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த முயற்சி; வலுக்கும் கண்டனங்கள். கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை இனந்தெரியாத நபர்கள் கிளிநொச்சி நகரில் வைத்து வானில் கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில், சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,"கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீது கிளிநொச்சி நகரில் தாக்குதல் நடத்தி வானில் கடத்தும் முயற்சியொன்று 26.12.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவர் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வனைப் பின்தொடர்ந்து வந்திருந்த வான் யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் வழிமறித்து இவ்வாறு கடத்தலை முன்னெடுக்க முற்பட்டுள்ளது.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.வன்னியில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு மற்றும் பரவி வரும் போதைபொருள் கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியமை மற்றும் தகவல் அறியும் சட்டமூலத்தில் தகவல்களைப் பெற்று பல ஊழல்களை வெளிப்படுத்த முயன்றமையின் காரணமாக தாம் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளப்பட்டுள்ளார் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் முயற்சியை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வானைச் செலுத்தி வந்த சாரதியை அடையாளம் காட்ட முடியும் என்று தமிழ்ச்செல்வன் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் உரிய விசாரணையை மேற்கொண்டு அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணியை முன்னெடுக்கும் சூழ்நிலையை வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ஏற்படுத்தப் பாதுகாப்புத் தரப்பினர் பணியாற்ற வேண்டும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை, ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டமைக்கு  கிளிநொச்சி  மாவட்ட ஊடக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.கிளிநொச்சி ஊடக அமையம்  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,எமது ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன், நேற்று(26) மாலை தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் வாகனத்தில் வந்தோர் அவரை இடைமறித்து தமது வாகனத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்டுள்ளனர். இதை எதிர்த்துத் தமிழ்ச்செல்வன்  போராடியபோது, கடத்தற்காரர்கள் தமிழ்ச்செல்வனைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தமிழ்ச்செல்வன்   கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  அரசியல் குறைபாடுகள், மக்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சினைகள், நிர்வாக முறைகேடுகள், ஊழல், சுற்றுச் சூழல் சிதைப்பு, சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள்பாவனை போன்றவற்றுக்கு எதிராக மிகவும் துணிச்சலான முறையில் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் அளித்து வரும் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது, அவருடைய பணிகளை முடக்குவதற்கான உள்நோக்கைக் கொண்டதாக சந்தேகம் கொள்ள வைக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன், யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பிந்திய காலத்திலும் துணிச்சலாவவும் நேர்மையாகவும் பணியாற்றியவர். இத்தகைய சிறப்பு மிக்க ஊடகவியலாளர் ஒருவரின் மீதான தாக்குதலானது,  மக்களுடைய நல் வாழ்வுக்கான எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகவே கொள்ளப்பட வேண்டும். ஊடகவிலாளர் மீதான இந்தக் கடத்தல் முயற்சியும் தாக்குதலும் ஊடகத்துறையின் சுயாதீனத்துக்கும் ஊடகவியலாளரின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். நாடு புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாக  அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே பதட்டத்தை உருவாக்குவதோடு ஊடகத்துறைக்கும் பாரிய சவாலை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதேபோன்று அண்மையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்டமைக்கான சரியான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்  தொடர்வதால்தான் தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் உறுதிய முறையில் உரிய நடவடிக்கையை அரசும் காவல்துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடே என்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதுஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-"போரின் போதும், போருக்குப் பின்னரான காலப் பகுதியிலும் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதற்கு ஊடகவியலாளர் கடத்தப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொல்லப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமையே காரணம்.அதன் நீட்சியாக ஆயுத பலம், பண பலம், அரசியல் பலம் கொண்டவர்கள் மக்கள் நலன் சார்ந்து பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும், அவர்கள் மீதான அடக்குமுறைகளையும் தொடர்ந்தும் செய்த வண்ணமே உள்ளனர். அதனையே கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலும் எடுத்துக்காட்டுகின்றது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே பகல் பொழுதில் பொதுமக்கள் செறித்த பகுதியில் ஊடகவியலாளரைக் கடத்த முற்பட்டதுடன், தாக்குதல் நடத்தப்பட்டமை ஊடகவியலாளர்களது பாதுகாப்பையும் கேள்விக்கு உட்பத்தியுள்ளதுடன், நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.எனவே, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கோருகின்றது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை, கிளிநொச்சியில் ஊடகவியலாளர் கடத்த முற்பட்டதுடன் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதுவரையில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்படாமையினையிட்டு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என மட்டு.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மட்டு.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கிளிநொச்சி அலுவலகம் ஒன்றில் கடமையும் பணிபுரியும் ஊடகவியலாளரும் கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளருமான முருகையா தமிழ்செல்வன் நேற்று மாலை (டிசம்பர் 26) தனது கடமையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிற வாகனத்தில் வந்த இருவர் அவரை கடத்திச் செல்ல முற்பட்டதுள்ளதுடன் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.புதிய ஆட்சியொன்று இந்த நாட்டினை பொறுப்பேற்றுள்ள நிலையில் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளமையானது இந்த நாட்டில்இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளது.குறிப்பாக வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் என்பது தொடர்ச்சியாக இருந்துவருகின்றது.பல்வேறு வழிகளில் கடந்த காலங்கள் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.இது தொடர்பில் கடந்த காலத்தில் மட்டு.ஊடக அமையம் போராட்டங்களை முன்னெடுத்ததுடன் அது தொடர்பான அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.இந்த நிலையில் தற்போதும் அதேபோன்ற சூழ்நிலையே வடகிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது என்பதையே இந்த தாக்குதல் நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது.ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் மக்கள் பாதிப்புகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் மறுக்கப்படுமானால் அது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீதான கேள்வித்தன்மையினைவே வெளிப்படுத்தி நிற்கும்.எனவே தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளருக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் அவரின் பாதுகாப்பு தொடர்பிலும் கரிசனை கொள்ளவேண்டும்.குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதுடன் கடந்த காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இந்த வேளையில் எங்களது நீதியை கோருகின்றோம்.மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதுவரையில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்படாமையினையிட்டு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement