முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களை பின்தொடர்ந்த நபரை, மக்கள் மடக்கிப் பிடித்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு நேற்றுமுன்தினம் மதியம் 02 மணியளவில் சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார்.
அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சாரதி எதற்காக செல்கிறீர்கள் என கேட்டபோது அவருக்கு suprice gift delivery செய்யவேண்டுமெனக் தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்தில் அவர் தன்னை உருமறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடி கழன்றுள்ளது.
இதையடுத்து அவர் தப்பியோடி வீதியால் சென்ற இ.போ.ச பேருந்தில் ஏறமுயற்சித்த போது அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது அவரிடமிருந்து ஒன்றரை அடி நீள வாள், கயிறு மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவரை விசாரித்ததில் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் பிறேம் மற்றும் கிந்துஜனை கொல்லவந்ததாக கூறியுள்ளார்.
அதனையடுத்து அவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் தி.கிந்துஜனினால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன்,
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மாங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
தமிழ் அரசியல்வாதிகளை கொல்ல முயற்சி. வாளுடன் வந்தவர் மடக்கிப்பிடிப்பு. முல்லைத்தீவில் பரபரப்பு. முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களை பின்தொடர்ந்த நபரை, மக்கள் மடக்கிப் பிடித்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு நேற்றுமுன்தினம் மதியம் 02 மணியளவில் சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார்.அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சாரதி எதற்காக செல்கிறீர்கள் என கேட்டபோது அவருக்கு suprice gift delivery செய்யவேண்டுமெனக் தெரிவித்துள்ளார். சற்று நேரத்தில் அவர் தன்னை உருமறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடி கழன்றுள்ளது. இதையடுத்து அவர் தப்பியோடி வீதியால் சென்ற இ.போ.ச பேருந்தில் ஏறமுயற்சித்த போது அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.இதன் போது அவரிடமிருந்து ஒன்றரை அடி நீள வாள், கயிறு மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.அவரை விசாரித்ததில் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் பிறேம் மற்றும் கிந்துஜனை கொல்லவந்ததாக கூறியுள்ளார். அதனையடுத்து அவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் தி.கிந்துஜனினால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன்,குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மாங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.