வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த சந்தேகநபர் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதையடுத்து குறித்த பெண்ணின் உறவினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து குறித்த சந்தேகநபரை நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் கைது செய்தனர்.
பொலிஸா ரின் நடவடிக்கைக்குள் சிக்காமல் குறித்த சந்தேகநபர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் அடிப்படையில் நேற்று (14) நள்ளிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த நபரை எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
வாய்பேச முடியாத பெண் மீது பலாத்கார முயற்சி ; சந்தேக நபருக்கு விளக்கமறியல் வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த மாதம் 27 ஆம் திகதி நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த சந்தேகநபர் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.இதையடுத்து குறித்த பெண்ணின் உறவினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து குறித்த சந்தேகநபரை நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் கைது செய்தனர். பொலிஸா ரின் நடவடிக்கைக்குள் சிக்காமல் குறித்த சந்தேகநபர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் அடிப்படையில் நேற்று (14) நள்ளிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இந்த நிலையில் குறித்த நபரை எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.