மாத்தறை - வெலிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலேன பகுதியில், கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் இந்த சம்பவம் பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 76 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தனது மனைவியுடன் பெலேன கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடலில் மூழ்கி அவுஸ்திரேலியப் பிரஜை உயிரிழப்பு மனைவியுடன் நீராடிக்கொண்டிருந்தபோது துயரம் மாத்தறை - வெலிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலேன பகுதியில், கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் இந்த சம்பவம் பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 76 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர் தனது மனைவியுடன் பெலேன கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.