• Apr 26 2025

நெற்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்திவரும் அறக்கொட்டியான் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல்

Chithra / Apr 26th 2025, 11:55 am
image

 

 

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கையில் பாதிப்பினை ஏற்படுத்திவரும் அறக்கொட்டியான் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது. 

குறித்த  கருத்தரங்கு புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தில்இன்று காலை கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தருமபுரம், புளியம்பொக்கணை மற்றும் கண்டாவளை  விவசாயப்போதனாசிரியர்களினால் நடாத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் தருமபுரம், கண்டாவளை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய பிரதேசங்ளைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்களால் நடமாடும் சேவையூடாக ஒலிபெருக்கி மூலமாக தருமபுரம்,புளியம்பொக்கணை, கண்டாவளை, ஊரியான், முரசுமோட்டடை, குமரபுரம், பன்னங்கண்டி மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் "நெற்செய்கையில்  அறக்கொட்டியான் தாக்கத்தை கட்டுப்படுத்துவது" தொடர்பான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு இதுவிடயம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. 


நெற்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்திவரும் அறக்கொட்டியான் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல்   கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கையில் பாதிப்பினை ஏற்படுத்திவரும் அறக்கொட்டியான் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது. குறித்த  கருத்தரங்கு புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தில்இன்று காலை கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தருமபுரம், புளியம்பொக்கணை மற்றும் கண்டாவளை  விவசாயப்போதனாசிரியர்களினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தருமபுரம், கண்டாவளை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய பிரதேசங்ளைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.இதேவேளை இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்களால் நடமாடும் சேவையூடாக ஒலிபெருக்கி மூலமாக தருமபுரம்,புளியம்பொக்கணை, கண்டாவளை, ஊரியான், முரசுமோட்டடை, குமரபுரம், பன்னங்கண்டி மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் "நெற்செய்கையில்  அறக்கொட்டியான் தாக்கத்தை கட்டுப்படுத்துவது" தொடர்பான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது பொதுமக்களுக்கு இதுவிடயம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement