• Feb 07 2026

திருகோணமலையில் இளம் மீனவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

Chithra / Feb 5th 2026, 1:19 pm
image


திருகோணமலை - கருமலையூற்றுப் பகுதியில் இளம் மீனவர்களுக்கான கடற்றொழில் சட்டங்கள் மற்றும் கடல் வளப் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (5) நடைபெற்றது.

மன்னார் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (MESDO) அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, அதன் இயக்குனர் ஜே. யாட்சன் பிகுராடோ தலைமை தாங்கினார்.

திருகோணமலை- கருமலையூற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 110 இளம் மீனவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இயக்குனர் ஜே. யாட்சன் பிகுராடோ, நாட்டின் பொருளாதாரத்திலும் உணவுப் பாதுகாப்பிலும் மீனவர்கள் வகிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மீனவர்கள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமானால், நவீன காலத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்களை மதித்து நடப்பது அவசியம்," என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விழிப்புணர்வு அமர்வில் திருகோணமலை மேற்கு கடற்றொழில் பரிசோதகர் ஆர். அரவிந்தன் வளவாளராகக் கலந்துகொண்டு விரிவான விளக்கங்களை வழங்கினார். 

அவரது உரையில்,தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தவிர்ப்பதன் சட்ட ரீதியான அவசியம் மற்றும் மீறல்களுக்கான விளைவுகள் குறித்தும், கடல் வளங்களை அழிக்காமல், எதிர்கால சந்ததியினரும் பயன்பெறும் வகையில் எவ்வாறு நிலையான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவது என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், ஆழ்கடல் மீன்பிடியின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.


திருகோணமலையில் இளம் மீனவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு திருகோணமலை - கருமலையூற்றுப் பகுதியில் இளம் மீனவர்களுக்கான கடற்றொழில் சட்டங்கள் மற்றும் கடல் வளப் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (5) நடைபெற்றது.மன்னார் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (MESDO) அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, அதன் இயக்குனர் ஜே. யாட்சன் பிகுராடோ தலைமை தாங்கினார்.திருகோணமலை- கருமலையூற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 110 இளம் மீனவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டனர்.நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இயக்குனர் ஜே. யாட்சன் பிகுராடோ, நாட்டின் பொருளாதாரத்திலும் உணவுப் பாதுகாப்பிலும் மீனவர்கள் வகிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.மீனவர்கள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமானால், நவீன காலத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்களை மதித்து நடப்பது அவசியம்," என அவர் சுட்டிக்காட்டினார்.இந்த விழிப்புணர்வு அமர்வில் திருகோணமலை மேற்கு கடற்றொழில் பரிசோதகர் ஆர். அரவிந்தன் வளவாளராகக் கலந்துகொண்டு விரிவான விளக்கங்களை வழங்கினார். அவரது உரையில்,தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தவிர்ப்பதன் சட்ட ரீதியான அவசியம் மற்றும் மீறல்களுக்கான விளைவுகள் குறித்தும், கடல் வளங்களை அழிக்காமல், எதிர்கால சந்ததியினரும் பயன்பெறும் வகையில் எவ்வாறு நிலையான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவது என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், ஆழ்கடல் மீன்பிடியின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement