தேசிய மார்பகப் புற்றுநோய் மாதத்தினை முன்னிட்டு திருகோணமலை -தோப்பூரில் விழிப்புணர்வு பேரணி இன்றையதினம்(24) காலை இடம்பெற்றது.
இதனை தோப்பூர் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து சுலோகங்களை ஏந்தியவாறு பேரணி தோப்பூர் பிரதான வீதி ஊடாகச் சென்று மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.
தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வைத்தியர்கள் உள்ளிட்ட அதிகளவான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஹஸ்ஸாலியினால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மார்பகப் புற்றுநோய் மாதத்தினை முன்னிட்டு திருமலையில் விழிப்புணர்வு பேரணி. தேசிய மார்பகப் புற்றுநோய் மாதத்தினை முன்னிட்டு திருகோணமலை -தோப்பூரில் விழிப்புணர்வு பேரணி இன்றையதினம்(24) காலை இடம்பெற்றது.இதனை தோப்பூர் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து சுலோகங்களை ஏந்தியவாறு பேரணி தோப்பூர் பிரதான வீதி ஊடாகச் சென்று மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வைத்தியர்கள் உள்ளிட்ட அதிகளவான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஹஸ்ஸாலியினால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.