• Nov 24 2024

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி..!samugammedia

Tharun / Jan 24th 2024, 6:34 pm
image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி இன்று(24) இடம்பெற்றது 


வடமாகாண  சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.  இன்று காலை திருநெல்வேலி சந்தியில் ஆரம்பித்த டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியினை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான 0-நுழைவாயில் வரை இந்த விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

விழிப்புணர்வு நடைபவனியில்  வடமாகாண  சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆறுமுகம் கேதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, கோப்பாய் பொலிசார், சுகாதார பரிசோதர்கள், மருத்துவ மாதுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் கல்வி நிறுவன  மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையினர் என பலரும் கலந்துகொண்டனர் 


 இதன்போது டெங்கு நோய் தொடர்பான பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பொது சுகாதார பரிசோதகர்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி.samugammedia யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி இன்று(24) இடம்பெற்றது வடமாகாண  சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.  இன்று காலை திருநெல்வேலி சந்தியில் ஆரம்பித்த டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியினை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான 0-நுழைவாயில் வரை இந்த விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.விழிப்புணர்வு நடைபவனியில்  வடமாகாண  சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆறுமுகம் கேதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, கோப்பாய் பொலிசார், சுகாதார பரிசோதர்கள், மருத்துவ மாதுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் கல்வி நிறுவன  மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையினர் என பலரும் கலந்துகொண்டனர்  இதன்போது டெங்கு நோய் தொடர்பான பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பொது சுகாதார பரிசோதகர்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

Advertisement