• May 05 2024

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்...!samugammedia

Sharmi / Dec 21st 2023, 9:36 am
image

Advertisement

கண்டகுழி கடற்கரையில் இடப்படும் ஆமை முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து ஆமைக் குஞ்சுகளாக மாறிய பின்னர் மீண்டும் கடற்கரையில் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் ஆமை முட்டைகளை சேகரித்து பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டு, 45 நாட்களின் பின்னர் முட்டையிலிருந்து 27 ஆமைக் குஞ்சுகள் வெளியில் வந்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இதன்போது நேற்று மாலை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆமைப் பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று குறித்த ஆமைக் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர். 

குறித்த கடலாமை அரியவகையான (Olive Ridley) மஞ்சள் நிறச் சிற்றாமை வகையைச் சேர்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.




வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்.samugammedia கண்டகுழி கடற்கரையில் இடப்படும் ஆமை முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து ஆமைக் குஞ்சுகளாக மாறிய பின்னர் மீண்டும் கடற்கரையில் விடுவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கடந்த மாதம் ஆமை முட்டைகளை சேகரித்து பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டு, 45 நாட்களின் பின்னர் முட்டையிலிருந்து 27 ஆமைக் குஞ்சுகள் வெளியில் வந்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.இதன்போது நேற்று மாலை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆமைப் பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று குறித்த ஆமைக் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர். குறித்த கடலாமை அரியவகையான (Olive Ridley) மஞ்சள் நிறச் சிற்றாமை வகையைச் சேர்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement