பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பிரதேச பாரம்பரிய கூத்து, இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய இசை நாடக கூத்துப் பெருவிழா நேற்று இரவு (08) 6.00 மணியளவில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் விருந்தினர்கள் பளை பேருந்து நிலையத்திலிருந்து மங்கள வாத்திய இசையோடு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த .ஜெயசீலன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் கி.மாலினி ,கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் செ.ரூபகுமார் ,கிளிநொச்சி மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.நிலோஜா,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக ,ஓய்வுநிலை உதவி அரச அதிபர் சு.புத்திசிகாமணி ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர் ந.மோகனறூபன் ,யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழக செயலாளர் நா.விமலநாதன் ,திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் ஜோண்சன் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சத்தியவான் சாவித்திரி,“ஞானசௌந்தரி,அரிச்சந்திர மயானகாண்டம்,காத்தவராயன் கூத்து போன்ற கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டன.
பச்சிலைப்பள்ளி இசை நாடக கூத்துப் பெருவிழா பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பிரதேச பாரம்பரிய கூத்து, இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய இசை நாடக கூத்துப் பெருவிழா நேற்று இரவு (08) 6.00 மணியளவில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வின் விருந்தினர்கள் பளை பேருந்து நிலையத்திலிருந்து மங்கள வாத்திய இசையோடு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த .ஜெயசீலன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் கி.மாலினி ,கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் செ.ரூபகுமார் ,கிளிநொச்சி மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.நிலோஜா,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக ,ஓய்வுநிலை உதவி அரச அதிபர் சு.புத்திசிகாமணி ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர் ந.மோகனறூபன் ,யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழக செயலாளர் நா.விமலநாதன் ,திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் ஜோண்சன் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சத்தியவான் சாவித்திரி,“ஞானசௌந்தரி,அரிச்சந்திர மயானகாண்டம்,காத்தவராயன் கூத்து போன்ற கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டன.