நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றம் அவர்கள் இருவரையும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க இதன்போது உத்தரவிட்டார்.
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கம் கடந்த 27 ஆம் திகதி சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்ட 25 பேர் இதற்கு முன்னர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளில் கீழ் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட இருவருக்கு பிணை நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நீதிமன்றம் அவர்கள் இருவரையும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க இதன்போது உத்தரவிட்டார்.கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கம் கடந்த 27 ஆம் திகதி சுகாதார அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.இதன்போது, கைது செய்யப்பட்ட 25 பேர் இதற்கு முன்னர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளில் கீழ் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.