• Jul 08 2024

அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிப்பு..!

Chithra / Jun 11th 2024, 12:03 pm
image

Advertisement

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (11) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கு தொடர்பில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரினார்.

இதையடுத்து, இந்த தடை உத்தரவை வரும் 25ம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிப்பு. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று (11) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, வழக்கு தொடர்பில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரினார்.இதையடுத்து, இந்த தடை உத்தரவை வரும் 25ம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement