• Jul 13 2026

புகையிலை இல்லா தலைமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Chithra / Jul 13th 2026, 3:39 pm
image

  

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் 'புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை' (Tobacco-Free Generation) கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விசேட கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.


புகையிலை சார்ந்த உற்பத்திகள் உலகில் மிகவும் அழிவுகரமான பொருட்கள் என்றும், அதிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கையில் வருடாந்தம் சுமார் 20,000 பேர் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையினால் உயிரிழப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


இந்தநிலையில் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையினால் 2019-ஆம் ஆண்டில் மாத்திரம் 214 பில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்தி, அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புகையிலை இல்லா தலைமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை   2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் 'புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை' (Tobacco-Free Generation) கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விசேட கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.புகையிலை சார்ந்த உற்பத்திகள் உலகில் மிகவும் அழிவுகரமான பொருட்கள் என்றும், அதிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையில் வருடாந்தம் சுமார் 20,000 பேர் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையினால் உயிரிழப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையினால் 2019-ஆம் ஆண்டில் மாத்திரம் 214 பில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்தி, அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement