• Sep 20 2024

பங்களாதேஷ் உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

Tamil nila / Jul 21st 2024, 6:34 pm
image

Advertisement

சுதந்திரப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30% அரசு வேலை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால், பங்களாதேஷிவ் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.

சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளார்கள். 

இன்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசு வேலைகளில் 93% தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும், போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 5% அரசு வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு பங்களாதேஷ் அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

இன்றைய நிலவரப்படி, நாட்டில் இரண்டாவது நாளாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தலைநகர் டாக்காவின் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு சுதந்திரப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30% அரசு வேலை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால், பங்களாதேஷிவ் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளார்கள். இன்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளது.அரசு வேலைகளில் 93% தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும், போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 5% அரசு வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவுக்கு பங்களாதேஷ் அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.இன்றைய நிலவரப்படி, நாட்டில் இரண்டாவது நாளாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தலைநகர் டாக்காவின் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement