முறையான தேடுதல் உத்தரவு இல்லாமல் தனது சொத்துக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக சோதனை செய்ததாக கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக திஷான் குணசேகர இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) ஆஜரானார்.
வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய அவர்,
மாத்தறை – மாலிம்படவில் உள்ள தனது வீட்டிற்குள் சிவில் உடையில் சிஐடி அதிகாரிகள் நுழைந்ததாகக் கூறினார்.
அங்கு அவரது 84 வயது தாயாரும் ஒரு தொழிலாளியும் வசிக்கின்றனர்.
தனது வீடு சோதனையிடப்பட்டதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய திஷான் குணசேகர, இருப்பினும், தேவையான ஆவணங்கள் இல்லாத அதிகாரிகள் மற்றொரு நபரின் சொத்துக்களில் நுழைந்து வயதான உறவினர்களுக்கு இடையூறு விளைவிப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது என்றார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அழைப்பின் பேரில் இன்று முற்பகல் 11 மணியளவில் திணைக்களத்திற்கு வந்த திஷான் குணசேகர சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவிடம் 3 மணிநேர வாக்குமூலம் பதிவு முறையான தேடுதல் உத்தரவு இல்லாமல் தனது சொத்துக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக சோதனை செய்ததாக கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர குற்றம் சாட்டியுள்ளார்.வாக்குமூலம் அளிப்பதற்காக திஷான் குணசேகர இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) ஆஜரானார்.வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய அவர், மாத்தறை – மாலிம்படவில் உள்ள தனது வீட்டிற்குள் சிவில் உடையில் சிஐடி அதிகாரிகள் நுழைந்ததாகக் கூறினார்.அங்கு அவரது 84 வயது தாயாரும் ஒரு தொழிலாளியும் வசிக்கின்றனர்.தனது வீடு சோதனையிடப்பட்டதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய திஷான் குணசேகர, இருப்பினும், தேவையான ஆவணங்கள் இல்லாத அதிகாரிகள் மற்றொரு நபரின் சொத்துக்களில் நுழைந்து வயதான உறவினர்களுக்கு இடையூறு விளைவிப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது என்றார்.குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அழைப்பின் பேரில் இன்று முற்பகல் 11 மணியளவில் திணைக்களத்திற்கு வந்த திஷான் குணசேகர சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.