• Nov 21 2024

பாரத்-லங்கா வீட்டுத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்...!

Sharmi / Feb 19th 2024, 8:24 am
image

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும்  தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ், மலையகத்துக்கான பாரத் – லங்கா எனும் 10,000 வீட்டுத் திட்டம் இன்றையதினம்(19) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 1,300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் 

மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் ம் இன்றையதினம் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறவுள்ளது.

பாரத்-லங்கா வீட்டுத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம். இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும்  தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ், மலையகத்துக்கான பாரத் – லங்கா எனும் 10,000 வீட்டுத் திட்டம் இன்றையதினம்(19) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.முதற்கட்டமாக 1,300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்கமைய நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் ம் இன்றையதினம் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement