• Nov 28 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகப் போவதில்லை -பைடன் அதிரடி அறிவிப்பு!

Tamil nila / Jul 6th 2024, 8:06 am
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் அறிவித்துள்ளார்.

அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

டொனல்ட் ட்ராம்ப்புடன் நடைபெற்ற CNN தொலைக்காட்சி விவாதத்தில் ஜனாதிபதி பைடன் சரியாகப் பேசவில்லை.

இதனால் பைடனுக்கு அவரது ஜனநாயகக் கட்சிக்குள் சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜனாதிபதி பைடன் போன தேர்தலைப் போலவே வரும் தேர்தலிலும் டோனல்ட் டிரம்ப்பைத் தோற்கடிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தப் பக்கமும் சாயக்கூடிய விஸ்கோன்சின் மாநிலத்தின் மடிசன் நகரில் அவர் பேசினார்.

மிகுந்த உற்சாகத்தோடு பேசிய பைடன், எதிர்வரும் 2020 தேர்தலில் மீண்டும் வெற்றிபெறப் போவதாக குறிப்பிட்டுள்ளார். பிறகு 2024 என்று திருத்திக்கொண்டார்.

81 வயது பைடன் தமது வயதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்களுக்குப் பதில் வழங்கியுள்ளார். எதற்கு வயது ஒரு தடை  நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவரவா தேர்தலில் வெற்றிபெறவா என்று அவர் வினவியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகப் போவதில்லை -பைடன் அதிரடி அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் அறிவித்துள்ளார்.அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது.டொனல்ட் ட்ராம்ப்புடன் நடைபெற்ற CNN தொலைக்காட்சி விவாதத்தில் ஜனாதிபதி பைடன் சரியாகப் பேசவில்லை.இதனால் பைடனுக்கு அவரது ஜனநாயகக் கட்சிக்குள் சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜனாதிபதி பைடன் போன தேர்தலைப் போலவே வரும் தேர்தலிலும் டோனல்ட் டிரம்ப்பைத் தோற்கடிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.எந்தப் பக்கமும் சாயக்கூடிய விஸ்கோன்சின் மாநிலத்தின் மடிசன் நகரில் அவர் பேசினார்.மிகுந்த உற்சாகத்தோடு பேசிய பைடன், எதிர்வரும் 2020 தேர்தலில் மீண்டும் வெற்றிபெறப் போவதாக குறிப்பிட்டுள்ளார். பிறகு 2024 என்று திருத்திக்கொண்டார்.81 வயது பைடன் தமது வயதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்களுக்குப் பதில் வழங்கியுள்ளார். எதற்கு வயது ஒரு தடை  நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவரவா தேர்தலில் வெற்றிபெறவா என்று அவர் வினவியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement