• Nov 24 2024

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

Anaath / Jul 27th 2024, 5:59 pm
image

கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தலும் பொதுக் கூட்டமும்  யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன் போது கடந்த 1983 ஆம் ஆண்டு ஜீலை 25-27 ஆம் திகதிகளில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனையவர்களும் சுடரேற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் என்.சிறிகாந்தா உள்ளிட்ட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தலும் பொதுக் கூட்டமும்  யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.இதன் போது கடந்த 1983 ஆம் ஆண்டு ஜீலை 25-27 ஆம் திகதிகளில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனையவர்களும் சுடரேற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.இவ் நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் என்.சிறிகாந்தா உள்ளிட்ட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement