தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், இரு சிறுவர்கள் உயிரிழந்ததோடு, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய நபர் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி , பாதுக்க பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இந்த முச்சக்கரவண்டியில் வந்த காட்சிகள் அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையிலேயே பொலிஸார் தேடுதல் நடத்தி இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் 55 வயதுடைய தந்தை காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு சிறுவர்கள் பலியான கைக்குண்டுத் தாக்குதல் – சிக்கியது முச்சக்கரவண்டி தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், இரு சிறுவர்கள் உயிரிழந்ததோடு, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.தாக்குதலை நடத்திய நபர் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி , பாதுக்க பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இந்த முச்சக்கரவண்டியில் வந்த காட்சிகள் அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையிலேயே பொலிஸார் தேடுதல் நடத்தி இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் 55 வயதுடைய தந்தை காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.