• May 10 2026

இரத்ததான முகாம் மற்றும் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணி ஆரம்பம் !

shanu / Dec 2nd 2025, 11:57 am
image

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் சேகரிக்கும் பணி இன்றைய தினம் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, டிக்வா புயலின் தாக்கத்தினால், நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் உதவிப்பிரதேச செயலாளர் த. சத்தியகௌரி , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார்,இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ் , களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தாதியர்கள் , வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இரத்ததான முகாம் மற்றும் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணி ஆரம்பம் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் சேகரிக்கும் பணி இன்றைய தினம் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, டிக்வா புயலின் தாக்கத்தினால், நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் உதவிப்பிரதேச செயலாளர் த. சத்தியகௌரி , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார்,இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ் , களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தாதியர்கள் , வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement