வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவிவரும் குருதி தட்டுப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, வவுனியா சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் விசேட இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இம்மாபெரும் இரத்ததான முகாம், வவுனியா சமுதாயப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரியரட்ண அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் வழங்கினர்.
குறித்த முகாமின் மூலம் சேகரிக்கப்பட்ட குருதியினை, வைத்தியசாலையின் அவசர தேவைகளுக்காக வவுனியா இரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
வவுனியா சமுதாயப் பொலிஸாரினால் இரத்ததான முகாம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவிவரும் குருதி தட்டுப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, வவுனியா சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் விசேட இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இம்மாபெரும் இரத்ததான முகாம், வவுனியா சமுதாயப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரியரட்ண அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் வழங்கினர்.குறித்த முகாமின் மூலம் சேகரிக்கப்பட்ட குருதியினை, வைத்தியசாலையின் அவசர தேவைகளுக்காக வவுனியா இரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.