• Sep 08 2024

பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்த படகு; கடற்றொழிலாளர் ஒருவர் சாவு - ஒருவர் மாயம்..!

Chithra / May 28th 2024, 12:46 pm
image

Advertisement

 

பலப்பிட்டி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விபத்து இன்றுஅதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடற்றொழிலாளர்களின் படகு இயந்திரக் கோளாறு காரணமாக பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது படகில் இருந்த மூன்று பேரும் கடலில் விழுந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார்.

இந்நிலையில் ஏனைய இருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய விஜேராம மாவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான ஏரல் நிஷாந்த டி சில்வா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் டி சில்வா என்பவரே காணாமல் போயுள்ளார். 

அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாக தெரியவருகின்றது.

பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்த படகு; கடற்றொழிலாளர் ஒருவர் சாவு - ஒருவர் மாயம்.  பலப்பிட்டி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.இந்த விபத்து இன்றுஅதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த கடற்றொழிலாளர்களின் படகு இயந்திரக் கோளாறு காரணமாக பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன்போது படகில் இருந்த மூன்று பேரும் கடலில் விழுந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார்.இந்நிலையில் ஏனைய இருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.பலப்பிட்டிய விஜேராம மாவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான ஏரல் நிஷாந்த டி சில்வா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் டி சில்வா என்பவரே காணாமல் போயுள்ளார். அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement