நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப்பில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிகாவா மாநிலத்தில் உள்ள அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு, யோப் மாநிலத்தில் உள்ள கார்பிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் 52 பேர் பயணம் செய்த நிலையில் 25 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 14 பேரை தேடும்பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோப் மாநில அவசரநிலை மேலாண்மை ஏஜென்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
லீக்கேஜ் காரணமாக படகு நீரில் மூழ்கியதாக தெரிவித்த ஜிகாவா மாநில போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நைஜீரியாவில் கவிழ்ந்த படகு; 25பேர் உயிரிழப்பு - 14 பேர் மாயம் நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப்பில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜிகாவா மாநிலத்தில் உள்ள அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு, யோப் மாநிலத்தில் உள்ள கார்பிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் 52 பேர் பயணம் செய்த நிலையில் 25 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 14 பேரை தேடும்பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோப் மாநில அவசரநிலை மேலாண்மை ஏஜென்சி தலைவர் தெரிவித்துள்ளார்.லீக்கேஜ் காரணமாக படகு நீரில் மூழ்கியதாக தெரிவித்த ஜிகாவா மாநில போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.