• Nov 23 2024

காஸாவில் 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது!

Tharun / May 19th 2024, 12:53 pm
image

இஸ்ரேலில் கடந்த அக். 7-இல் நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களை காஸாவிலிருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகேரி தெரிவிக்கையில், இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 3 பேரது சடலங்களை காஸாவிலிருந்து மீட்டுள்ளோம்.அந்த 3 பேரும் 22 வயது பெண் ஷானி லூக், 28 வயது பெண் அமித் புக்ஸிலா, 56 வயது ஆண் இத்ஷாக் ஜெலெரென்டா் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.அவா்கள் அனைவரும் நோவா இசை விழாவில் ஹமாஸ் நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டவா்கள் என்றாா் அவா்.எனினும், காஸாவின் எந்தப் பகுதியிலிருந்து அந்தச் சடங்கள் மீட்கப்பட்டன என்ற விவரத்தை அவா் வெளியிடவில்லை.இதுகுறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘ஹமாஸால் 3 போ் கொல்லப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தற்போது காஸாவில் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவரையும், அவா்கள் உயிரோடு இருந்தாலும், கொல்லப்பட்டிருந்தாலும் இஸ்ரேலுக்கு மீண்டும் கொண்டுவந்தே தீருவோம்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது சடலமாக மீட்கப்பட்ட 3 பேரில் ஷானி லூக் ஜொ்மனி-இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமை பெற்றவா். இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினா் நநடத்திய தாக்குதலின்போது ஷானி லூக்கின் உடலை திறந்த வாகனத்தில் அவா்கள் அலங்கோலமான நிலையில் ஊா்வலமாக எடுத்துச் சென்ற படங்கள் வலைதளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஸாவில் 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது இஸ்ரேலில் கடந்த அக். 7-இல் நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களை காஸாவிலிருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகேரி தெரிவிக்கையில், இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 3 பேரது சடலங்களை காஸாவிலிருந்து மீட்டுள்ளோம்.அந்த 3 பேரும் 22 வயது பெண் ஷானி லூக், 28 வயது பெண் அமித் புக்ஸிலா, 56 வயது ஆண் இத்ஷாக் ஜெலெரென்டா் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.அவா்கள் அனைவரும் நோவா இசை விழாவில் ஹமாஸ் நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டவா்கள் என்றாா் அவா்.எனினும், காஸாவின் எந்தப் பகுதியிலிருந்து அந்தச் சடங்கள் மீட்கப்பட்டன என்ற விவரத்தை அவா் வெளியிடவில்லை.இதுகுறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘ஹமாஸால் 3 போ் கொல்லப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தற்போது காஸாவில் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவரையும், அவா்கள் உயிரோடு இருந்தாலும், கொல்லப்பட்டிருந்தாலும் இஸ்ரேலுக்கு மீண்டும் கொண்டுவந்தே தீருவோம்’ என தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போது சடலமாக மீட்கப்பட்ட 3 பேரில் ஷானி லூக் ஜொ்மனி-இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமை பெற்றவா். இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினா் நநடத்திய தாக்குதலின்போது ஷானி லூக்கின் உடலை திறந்த வாகனத்தில் அவா்கள் அலங்கோலமான நிலையில் ஊா்வலமாக எடுத்துச் சென்ற படங்கள் வலைதளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement