• May 11 2025

15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பெரும் பரபரப்பு - பொலிஸார் தீவிர விசாரணை samugammedia

Chithra / Dec 1st 2023, 12:17 pm
image

 

பெங்களுரூ, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு மின்னஞ்சல்  மூலம் மர்ம நபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். 

இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

இதனை தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார், 

பாடசாலைகளில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். 

மேலும், பாடசாலைகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது  என்பதை கண்டுபிடித்தனர்.

அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்று மாநில துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். பெரும் பரபரப்பு - பொலிஸார் தீவிர விசாரணை samugammedia  பெங்களுரூ, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.பாடசாலைகளுக்கு மின்னஞ்சல்  மூலம் மர்ம நபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார், பாடசாலைகளில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். மேலும், பாடசாலைகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது  என்பதை கண்டுபிடித்தனர்.அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்று மாநில துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now