இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரனவால் எதிர்வரும் கிழமை வைபவ ரீதியாக குறித்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் காணப்படுகின்றது.
இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது.
இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலைகள் அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும்.
இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான விடயங்களை கொண்டுள்ளது. ஆகவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பம் இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரனவால் எதிர்வரும் கிழமை வைபவ ரீதியாக குறித்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் காணப்படுகின்றது. இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது.இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலைகள் அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும்.இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான விடயங்களை கொண்டுள்ளது. ஆகவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.