• Nov 22 2024

விடுமுறையைக் கழிக்க சென்ற சிறுவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி மரணம் - காப்பாற்ற முயன்ற சகோதரன் வைத்தியசாலையில்!

Chithra / Jul 29th 2024, 7:42 am
image


கண்டி, லூயிஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஏழு வயது சிறுவன் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

வரெல்லாகம குருதுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் மிஸ்ஜான் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

குறித்த சிறுவனைக் காப்பாற்றுவதற்காக நீச்சல் தடாகத்தில் குதித்தபோது நீரில் மூழ்கிய அவரது 10 வயதுடைய சகோதரர் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

விடுமுறையைக் கழிப்பதற்காக இரண்டு குழந்தைகளும் நேற்று பெற்றோருடன் இந்த விடுதிக்கு வந்துள்ளனர்.

பிற்பகல் 11.00 மணியளவில் நீச்சல் தடாகத்திற்கு அருகில் சிறுவன் தனியாக இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் நீரில் மூழ்குவதைப் பார்த்து, அவரது மூத்த சகோதரர் நீச்சல் குளத்தில் குதித்து தனது தம்பியைக் காப்பாற்ற முயன்றதையடுத்து அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறையைக் கழிக்க சென்ற சிறுவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி மரணம் - காப்பாற்ற முயன்ற சகோதரன் வைத்தியசாலையில் கண்டி, லூயிஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஏழு வயது சிறுவன் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வரெல்லாகம குருதுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் மிஸ்ஜான் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.குறித்த சிறுவனைக் காப்பாற்றுவதற்காக நீச்சல் தடாகத்தில் குதித்தபோது நீரில் மூழ்கிய அவரது 10 வயதுடைய சகோதரர் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.விடுமுறையைக் கழிப்பதற்காக இரண்டு குழந்தைகளும் நேற்று பெற்றோருடன் இந்த விடுதிக்கு வந்துள்ளனர்.பிற்பகல் 11.00 மணியளவில் நீச்சல் தடாகத்திற்கு அருகில் சிறுவன் தனியாக இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறுவன் நீரில் மூழ்குவதைப் பார்த்து, அவரது மூத்த சகோதரர் நீச்சல் குளத்தில் குதித்து தனது தம்பியைக் காப்பாற்ற முயன்றதையடுத்து அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement