மாணவியின் தகாத புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் காதலன் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சந்தேக நபரான காதலனுடன் பல மாத காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சந்தேக நபர் இந்த மாணவியுடனான காதல் உறவை திடீரென முறித்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபரான காதலன் இந்த மாணவியின் தகாத புகைப்படங்களை பயன்படுத்தி மாணவியை அச்சுறுத்தி 34,500 ரூபா பணத்தை பெற்றுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் தனக்கு மேலும் 30,000 ரூபா பணம் தேவைப்படுவதாக இந்த மாணவியிடம் கூறியுள்ளார்.
பின்னர், இந்த மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதோடு,
மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் தகாத படங்களை வைத்து காதலன் செய்த மோசமான செயல் தீவிர தேடுதலில் பொலிஸார் மாணவியின் தகாத புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் காதலன் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது, 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சந்தேக நபரான காதலனுடன் பல மாத காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சந்தேக நபர் இந்த மாணவியுடனான காதல் உறவை திடீரென முறித்து கொண்டுள்ளார்.இந்நிலையில், சந்தேக நபரான காதலன் இந்த மாணவியின் தகாத புகைப்படங்களை பயன்படுத்தி மாணவியை அச்சுறுத்தி 34,500 ரூபா பணத்தை பெற்றுள்ளார்.இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் தனக்கு மேலும் 30,000 ரூபா பணம் தேவைப்படுவதாக இந்த மாணவியிடம் கூறியுள்ளார்.பின்னர், இந்த மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதோடு,மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.