இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனையை இடைநிறுத்தியுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்தில் கடுமையான மீறல்களை மேற்கொள்வதற்குக் குறித்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் எனச் சுட்டிக்காட்டியே பிரித்தானியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாகப் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரித்தானியாவின் குறித்த அறிவிப்பானது ஏமாற்றம் அளிப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளதாகச் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை இடைநிறுத்திய பிரித்தானியா இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனையை இடைநிறுத்தியுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தில் கடுமையான மீறல்களை மேற்கொள்வதற்குக் குறித்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் எனச் சுட்டிக்காட்டியே பிரித்தானியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாகப் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரித்தானியாவின் குறித்த அறிவிப்பானது ஏமாற்றம் அளிப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளதாகச் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.