• Dec 06 2024

Sharmi / Aug 26th 2024, 11:44 am
image

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(25) இரவு இடம்பெற்றது.

மடுல்சீமை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று தேடுதல் மேற்கொண்ட வெவ்வேறு இடங்களில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மடுல்சீமை கல்லுல்ல கீழ் பிரிவு பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 47 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்று(26) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிகளுடன் கைதான சகோதரர்கள். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம்(25) இரவு இடம்பெற்றது.மடுல்சீமை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று தேடுதல் மேற்கொண்ட வெவ்வேறு இடங்களில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.மடுல்சீமை கல்லுல்ல கீழ் பிரிவு பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 47 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் இருவரையும் இன்று(26) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement