• Mar 16 2026

நேபாளத்தில் தரையிறங்கும் போது சறுக்கிய புத்தா ஏர் விமானம்

Aathira / Jan 3rd 2026, 12:26 pm
image

நேபாளத்தின் புத்தா ஏர் (Buddha Air) விமானம் ஒன்று, ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 51 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் பத்ராபூர் விமான நிலையத்திற்கு புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டது.

குறித்த விமானம் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது  ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

விமான கண்காணிப்புத் தரவுகளின்படி , இந்த விபத்துக்குள்ளான விமானம் 9N-AMF இலக்கத்தைக் கொண்ட ATR 72-500 ரக டர்போபிராப் பயணிகள் விமானமாகும். 

விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுமார் 200 மீட்டர் தொலைவில் தரையிறக்கப்பட்டது. 

இதில், விமானம் சிறியளவில் சேதம் ஏற்பட்டது.

விமானம் நிறுத்தப்பட்டதும் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தற்போது காத்மாண்டுவில் இருந்து தொழில்நுட்ப மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில் தரையிறங்கும் போது சறுக்கிய புத்தா ஏர் விமானம் நேபாளத்தின் புத்தா ஏர் (Buddha Air) விமானம் ஒன்று, ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 51 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் பத்ராபூர் விமான நிலையத்திற்கு புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டது.குறித்த விமானம் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது  ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.விமான கண்காணிப்புத் தரவுகளின்படி , இந்த விபத்துக்குள்ளான விமானம் 9N-AMF இலக்கத்தைக் கொண்ட ATR 72-500 ரக டர்போபிராப் பயணிகள் விமானமாகும். விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுமார் 200 மீட்டர் தொலைவில் தரையிறக்கப்பட்டது. இதில், விமானம் சிறியளவில் சேதம் ஏற்பட்டது.விமானம் நிறுத்தப்பட்டதும் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தற்போது காத்மாண்டுவில் இருந்து தொழில்நுட்ப மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement