• May 20 2024

மக்கள் எதிர்ப்பையடுத்து சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டது!

Tamil nila / Mar 7th 2024, 8:57 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த சிலை அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்த நிலையில்,புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்பட்டனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசுபொருளான நிலையில் குறித்த புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

  நாளை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாகவும் எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பிடப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.


மக்கள் எதிர்ப்பையடுத்து சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டது யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த சிலை அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ் சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்த நிலையில்,புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்பட்டனர்.இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசுபொருளான நிலையில் குறித்த புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.  நாளை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாகவும் எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பிடப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement