• Apr 02 2025

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரிய போராட்டத்தில் இணைந்த பௌத்த பிக்கு...!

Sharmi / Feb 20th 2024, 11:36 am
image

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரி சற்றுமுன் கிளிநொச்சியில் போராட்டமொன்று ஆரம்பமானது.

இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம்  07 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த போராட்டமானது  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி டிப்போ சந்தி நோக்கி A9 வீதி ஊடாக பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப் போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சமயத் தலைவர்கள்  பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரிய போராட்டத்தில் இணைந்த பௌத்த பிக்கு. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரி சற்றுமுன் கிளிநொச்சியில் போராட்டமொன்று ஆரம்பமானது.இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம்  07 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.குறித்த போராட்டமானது  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி டிப்போ சந்தி நோக்கி A9 வீதி ஊடாக பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இப் போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சமயத் தலைவர்கள்  பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement