• Dec 19 2024

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் செல்வத்தை மீட்டு பயன்படுத்துமாறு மொட்டு கட்சி அறிவுரை

Chithra / Dec 19th 2024, 10:08 am
image

 

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ராஜபக்‌ச குடும்பத்தின் செல்வத்தை பயன்படுத்துமாறு பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக ஏராளம் பொய்களை அள்ளி வீசியது. 

உகண்டாவில் ராஜபக்‌ச குடும்பம் பாரிய செல்வத்தைப் பதுக்கியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் அதில் ஒன்று.

இந்நிலையில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நீக்கிக் கொள்ள உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும், ராஜபக்‌ச குடும்பத்தின் செல்வத்தை மீட்டு,

அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்த அரசாங்கத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார். 

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் செல்வத்தை மீட்டு பயன்படுத்துமாறு மொட்டு கட்சி அறிவுரை  எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ராஜபக்‌ச குடும்பத்தின் செல்வத்தை பயன்படுத்துமாறு பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக ஏராளம் பொய்களை அள்ளி வீசியது. உகண்டாவில் ராஜபக்‌ச குடும்பம் பாரிய செல்வத்தைப் பதுக்கியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் அதில் ஒன்று.இந்நிலையில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நீக்கிக் கொள்ள உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும், ராஜபக்‌ச குடும்பத்தின் செல்வத்தை மீட்டு,அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்த அரசாங்கத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement