சம்மாந்துறை பகுதியில் காணாமல் போன எருமை மாடுகள் தொடர்பான திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான 12 எருமை மாடுகள் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், காணாமல் போன எருமை மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், 7 எருமை மாடுகளை மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரையும் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், மீட்கப்பட்ட எருமை மாடுகள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களுடன் நேற்று (05) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் போன ஏனைய எருமை மாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும்,
எருமை மாடுகள் திருட்டு: இருவர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் சம்மாந்துறை பகுதியில் காணாமல் போன எருமை மாடுகள் தொடர்பான திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான 12 எருமை மாடுகள் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், காணாமல் போன எருமை மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், 7 எருமை மாடுகளை மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரையும் கைது செய்துள்ளனர்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், மீட்கப்பட்ட எருமை மாடுகள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களுடன் நேற்று (05) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது, இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.காணாமல் போன ஏனைய எருமை மாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும்,அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.