• Nov 07 2025

நிலச்சரிவால் இடிந்து விழுந்த கட்டடங்கள்; உயிர்சேதமின்றி தப்பிய மக்கள்!

shanuja / Oct 12th 2025, 9:48 pm
image

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில்  திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. 


ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் இன்று காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.


இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள்  இடிந்து நொருங்கியுள்ளன. 


நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 


நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், பொலிஸார்  மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.


போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இந்த நிலச்சரிவால் கட்டடங்கள் இடிந்து விழுந்த காட்சியைப் பார்த்த அப்பகுதியில் உள்ள மக்கள்  பதற்றத்துடன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நிலச்சரிவால் இடிந்து விழுந்த கட்டடங்கள்; உயிர்சேதமின்றி தப்பிய மக்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில்  திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் இன்று காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள்  இடிந்து நொருங்கியுள்ளன. நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், பொலிஸார்  மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலச்சரிவால் கட்டடங்கள் இடிந்து விழுந்த காட்சியைப் பார்த்த அப்பகுதியில் உள்ள மக்கள்  பதற்றத்துடன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement