கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உப்பளங்கள் அமையப்பெற்றுள்ள அநேகமான இடங்களில் பெய்த கடும் மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கப்பட்ட அளவில் உப்பு உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காலநிலையை கட்டுப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ முடியாது.
இதனால் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு கிலோ கிராம் கொள்வனவு செய்யும் மக்கள் பத்து, பதினைந்து கிலோ கிராம் எடையுடைய உப்பினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிலோ கணக்கில் உப்பு கொள்வனவை அனுமதிக்க முடியாது அமைச்சர் சுனில் அறிவிப்பு கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.இலங்கையில் உப்பளங்கள் அமையப்பெற்றுள்ள அநேகமான இடங்களில் பெய்த கடும் மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.எதிர்பார்க்கப்பட்ட அளவில் உப்பு உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலநிலையை கட்டுப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ முடியாது.இதனால் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.எனினும், ஒரு கிலோ கிராம் கொள்வனவு செய்யும் மக்கள் பத்து, பதினைந்து கிலோ கிராம் எடையுடைய உப்பினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.