அநுராதபுரத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து இன்று அதிகாலையில் உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இப் பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு யாத்ரீகர்கள் குழுவுடன் சென்று ஓய்வு விடுதியில் தங்கியிருந்த நிலையில்
பேருந்து இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயதுடைய எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே இச்சம்பவத்தில் எயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பேருந்து முழுமையாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் .
உடமலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து தீக்கிரை - ஒருவர் உயிரிழப்பு அநுராதபுரத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து இன்று அதிகாலையில் உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இப் பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு யாத்ரீகர்கள் குழுவுடன் சென்று ஓய்வு விடுதியில் தங்கியிருந்த நிலையில் பேருந்து இவ்வாறு தீப்பிடித்துள்ளது. இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 55 வயதுடைய எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே இச்சம்பவத்தில் எயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பேருந்து முழுமையாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் . உடமலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.