யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலை வீதியூடான பேருந்து சேவைகள் இன்று காலை சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், 788 வழித்தட பேரூந்து உரிமையாளர்களிடம், வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளுக்காக நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என நோயாளர் நலன்புரி சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இக் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் கீரிமலை, இளவாலை, தொட்டிலடி, மானிப்பாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 788 வழித்தடத்தில் இயங்கும் மூன்று தனியார் பேருந்துகள், வைத்தியசாலையின் வழியாக சேவை செய்ய ஆரம்பித்துள்ளன.
இதனால் சங்கானை வைத்தியசாலை நோக்கி பயணம் செய்யும் நோயாளிகள், வயோதிபர்கள், பொதுமக்கள் என பலருக்கும் இதனால் நன்மை ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிகழ்வில் வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெங்காதரன், இளவாலை சிற்றூர்தி சங்க தலைவர், சங்கானை பிரதேச செயலர், மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி, வைத்தியசாலை மருத்துவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கானை பிரதேச வைத்தியசாலை ஊடான பேருந்து சேவைகள் ஆரம்பம். யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலை வீதியூடான பேருந்து சேவைகள் இன்று காலை சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், 788 வழித்தட பேரூந்து உரிமையாளர்களிடம், வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளுக்காக நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என நோயாளர் நலன்புரி சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.இக் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் கீரிமலை, இளவாலை, தொட்டிலடி, மானிப்பாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 788 வழித்தடத்தில் இயங்கும் மூன்று தனியார் பேருந்துகள், வைத்தியசாலையின் வழியாக சேவை செய்ய ஆரம்பித்துள்ளன.இதனால் சங்கானை வைத்தியசாலை நோக்கி பயணம் செய்யும் நோயாளிகள், வயோதிபர்கள், பொதுமக்கள் என பலருக்கும் இதனால் நன்மை ஏற்படும் என கூறப்படுகிறது.இந்நிகழ்வில் வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெங்காதரன், இளவாலை சிற்றூர்தி சங்க தலைவர், சங்கானை பிரதேச செயலர், மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி, வைத்தியசாலை மருத்துவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.