• Dec 08 2024

யாழில் போட்டி போட்டு ஓட்டமெடுத்த பேருந்துகள்- முதியவர் படுகாயம்..!

Sharmi / Sep 26th 2024, 10:48 am
image

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இன்று(26) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அராலி அம்மன் கோவில் பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள்,  காரைநகர் - யாழ்ப்பாணம் பிரதான வீதிக்குள் திடீரென நுழைந்தது.

இதன்போது காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் மீது அரச பேருந்து மோதியது.

இந்நிலையில் முதியவர் படுகாயம் அடைந்தார். 

இதன்போது அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். 

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் போட்டி போட்டு ஓட்டமெடுத்த பேருந்துகள்- முதியவர் படுகாயம். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இன்று(26) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,அராலி அம்மன் கோவில் பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள்,  காரைநகர் - யாழ்ப்பாணம் பிரதான வீதிக்குள் திடீரென நுழைந்தது.இதன்போது காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் மீது அரச பேருந்து மோதியது.இந்நிலையில் முதியவர் படுகாயம் அடைந்தார். இதன்போது அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement