• Nov 07 2025

தேசிய இறக்குமதி வரித் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

Chithra / Nov 4th 2025, 8:46 pm
image


தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. 

இலங்கை போட்டி வர்த்தகம் மற்றும் முதலீட்டு மையமாகத் ஸ்தாபிப்பதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் ஊகிக்கக்கூடிய இறக்குமதி வரி முறையின் கீழ் நடைமுறைப்படுத்துவதை இலக்காகக் கொண்ட தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் தயாரிப்பதற்காக 2024.06.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய இறக்குமதி வரிக்கொள்கை குழுவொன்று 2025.01.15 அன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள அரச கொள்கைத் திருத்தங்களுக்கமைய, ஒருசில வரிக் கொள்கைகளுடன் இணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக மற்றும் நிச்சயமற்றதன்மையை தவிர்ப்பதற்குமான தேசிய இறக்குமதி வரிக் கொள்கையில் ஒருசில ஏற்பாடுகளைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவையை தேசிய இறக்குமதி வரிக் கொள்கைக் குழுவால் அடையாளங் காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில் தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய இறக்குமதி வரித் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கை போட்டி வர்த்தகம் மற்றும் முதலீட்டு மையமாகத் ஸ்தாபிப்பதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் ஊகிக்கக்கூடிய இறக்குமதி வரி முறையின் கீழ் நடைமுறைப்படுத்துவதை இலக்காகக் கொண்ட தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் தயாரிப்பதற்காக 2024.06.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய இறக்குமதி வரிக்கொள்கை குழுவொன்று 2025.01.15 அன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள அரச கொள்கைத் திருத்தங்களுக்கமைய, ஒருசில வரிக் கொள்கைகளுடன் இணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக மற்றும் நிச்சயமற்றதன்மையை தவிர்ப்பதற்குமான தேசிய இறக்குமதி வரிக் கொள்கையில் ஒருசில ஏற்பாடுகளைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவையை தேசிய இறக்குமதி வரிக் கொள்கைக் குழுவால் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில் தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement