இழந்த பற்களை இயற்கையாக மீண்டும் வளர்க்க முடியுமா? இதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய மருந்து ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.
கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் யூ.எஸ்.ஏ.ஜி-1 (USAG-1) என்ற புரதத்தின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் புதிய பற்களை உருவாக்க முடியுமா என ஆய்வு செய்துள்ளனர்.
எலிகள் மற்றும் ஃபெரெட் Ferret விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் புதிய பற்கள் உருவாகும் சாத்தியம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, டி.ஆர்.ஜி035 (TRG035) என்ற மருந்தின் மூலம் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2024 செப்டம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை திட்டமிடப்பட்ட முதற்கட்ட ஆய்வில், மருந்தின் பாதுகாப்பு மற்றும் சரியான அளவைக் கண்டறிவதே முக்கிய நோக்கமாக இருந்தது.
எதிர்காலத்தில் பிறவியிலேயே நிரந்தரப் பற்கள் இல்லாதவர்களுக்கும், இயற்கையாக மூன்றாவது தொகுதி பற்களை வளர்க்கும் சிகிச்சையாகவும் இதனை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
எனினும், மனிதர்களிடம் இழந்த பற்களை இந்த மருந்து வெற்றிகரமாக மீண்டும் வளர்க்கும் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இது ஆராய்ச்சி நிலையில் உள்ள மருத்துவ முயற்சி மட்டுமே.
இழந்த பற்கள் மீண்டும் வளருமா- புதிய மருத்துவ ஆராய்ச்சி இழந்த பற்களை இயற்கையாக மீண்டும் வளர்க்க முடியுமா இதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய மருந்து ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் யூ.எஸ்.ஏ.ஜி-1 (USAG-1) என்ற புரதத்தின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் புதிய பற்களை உருவாக்க முடியுமா என ஆய்வு செய்துள்ளனர். எலிகள் மற்றும் ஃபெரெட் Ferret விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் புதிய பற்கள் உருவாகும் சாத்தியம் கண்டறியப்பட்டுள்ளது.இதன் அடுத்த கட்டமாக, டி.ஆர்.ஜி035 (TRG035) என்ற மருந்தின் மூலம் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2024 செப்டம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை திட்டமிடப்பட்ட முதற்கட்ட ஆய்வில், மருந்தின் பாதுகாப்பு மற்றும் சரியான அளவைக் கண்டறிவதே முக்கிய நோக்கமாக இருந்தது.எதிர்காலத்தில் பிறவியிலேயே நிரந்தரப் பற்கள் இல்லாதவர்களுக்கும், இயற்கையாக மூன்றாவது தொகுதி பற்களை வளர்க்கும் சிகிச்சையாகவும் இதனை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் இலக்கு வைத்துள்ளனர்.எனினும், மனிதர்களிடம் இழந்த பற்களை இந்த மருந்து வெற்றிகரமாக மீண்டும் வளர்க்கும் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இது ஆராய்ச்சி நிலையில் உள்ள மருத்துவ முயற்சி மட்டுமே.