• Apr 17 2026

லொறியுடன் மோதி தீப்பிடித்து எரிந்த கார்; நித்திரைக்கலக்கத்தால் பறிபோன மூவரின் உயிர்!

shanu / Oct 2nd 2025, 1:02 pm
image

நெடுஞ்சாலையில் சாலை மைய தடுப்பு மற்றும் லொறி மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

 

இந்த விபத்துச் சம்பவம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில்  இடம்பெற்றுள்ளது. 

 

சென்னை கொளத்தூரில் இருந்து கேரளாவுக்கு ஐந்து பேர் காரில் பயணித்தனர். பயணித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென கார் சாலையின் மையத்தடுப்புடன் மோதி பின்னர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 


சாலையின் தடுப்பு மற்றும் லொறியுடன் பலமாக மோதியதில் விபத்திற்குள்ளான அடுத்த நொடியிலேயே கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. 


கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கார் பற்றி எரியத் தொடங்கியதால் காரில் பயணித்த ஐவரில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  


மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில்  விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார்   விசாரணையை மேற்கொண்டனர். 


விசாரணையில் நித்திரைக் கலக்கத்தில் காரை செலுத்தியதாலேயே விபத்து சம்பவித்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


நெடுஞ்சாலையில் தீப்பிடித்த கார் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறியுடன் மோதி தீப்பிடித்து எரிந்த கார்; நித்திரைக்கலக்கத்தால் பறிபோன மூவரின் உயிர் நெடுஞ்சாலையில் சாலை மைய தடுப்பு மற்றும் லொறி மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்துச் சம்பவம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில்  இடம்பெற்றுள்ளது.  சென்னை கொளத்தூரில் இருந்து கேரளாவுக்கு ஐந்து பேர் காரில் பயணித்தனர். பயணித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென கார் சாலையின் மையத்தடுப்புடன் மோதி பின்னர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. சாலையின் தடுப்பு மற்றும் லொறியுடன் பலமாக மோதியதில் விபத்திற்குள்ளான அடுத்த நொடியிலேயே கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கார் பற்றி எரியத் தொடங்கியதால் காரில் பயணித்த ஐவரில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில்  விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார்   விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் நித்திரைக் கலக்கத்தில் காரை செலுத்தியதாலேயே விபத்து சம்பவித்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.நெடுஞ்சாலையில் தீப்பிடித்த கார் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement