மட்டக்களப்பு - ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை ஓட்டமாவடி - நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பகுதியில் இருந்து வயல் வேலைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் மோதியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி - 1 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய சீனி முகம்மது முகம்மது இப்ராஹீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய கார்; வயல் வேலைக்கு சென்ற வயோதிபர் மரணம் மட்டக்களப்பு - ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை ஓட்டமாவடி - நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.ஓட்டமாவடி பகுதியில் இருந்து வயல் வேலைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் மோதியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி - 1 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய சீனி முகம்மது முகம்மது இப்ராஹீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.