ஹட்டன்- வனராஜா கல்பள்ளி பகுதியில் கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சாமிமலை பகுதியில் மரண வீடொன்றுக்கு வந்த குழுவினர் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, கார் வீதியை விட்டு விலகி வனராஜா கல்பள்ளிய பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததில்,
காயமடைந்தவர்கள் டிக்கோயா - கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும்,
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும்
கார் இன்னும் சற்று குடைசாய்ந்து இருப்பின் காசல்ரீ நீர் தேக்கத்தில் விழுந்து இருக்கும் எனவும்,
தெய்வாதீனமாக அவ்வாறு இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்; குழந்தை உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோகம் ஹட்டன்- வனராஜா கல்பள்ளி பகுதியில் கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.சாமிமலை பகுதியில் மரண வீடொன்றுக்கு வந்த குழுவினர் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, கார் வீதியை விட்டு விலகி வனராஜா கல்பள்ளிய பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததில்,காயமடைந்தவர்கள் டிக்கோயா - கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும்கார் இன்னும் சற்று குடைசாய்ந்து இருப்பின் காசல்ரீ நீர் தேக்கத்தில் விழுந்து இருக்கும் எனவும்,தெய்வாதீனமாக அவ்வாறு இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.