• May 23 2026

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்; பலியான உயிர்கள்

Chithra / Oct 20th 2025, 8:57 am
image

சீனாவில் உள்ள ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. 

துபாயிலிருந்து வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. 

விபத்தில் விமான நிலைய வாகனத்தில் இருந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இருப்பினும், விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட ஓடுபாதையை மூட விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்; பலியான உயிர்கள் சீனாவில் உள்ள ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. துபாயிலிருந்து வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விபத்தில் விமான நிலைய வாகனத்தில் இருந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஓடுபாதையை மூட விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement